உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கள்ளக்குறிச்சியில் புதிய சி.இ.ஓ. பொறுப்பேற்பு

கள்ளக்குறிச்சியில் புதிய சி.இ.ஓ. பொறுப்பேற்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட சி.இ.ஓ., கார்த்திகா நேற்று பொறுப்பேற்றார்.கள்ளக்குறிச்சியில் சி.இ.ஓ.,வாக இருந்த முருகன், பதவி உயர்வு பெற்று சென்னை பள்ளி கல்வித்துறை இயக்ககத்திற்கு மின் ஆளுமை துணை இயக்குனர் பணிக்கு மாற்றப்பட்டார். இவருக்கு பதிலாக மதுரையில் சி.இ.ஓ.,வாக பணியாற்றிய கார்த்திகா நேற்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் 10-வது புதிய சி.இ.ஓ.,வாக நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். இவர், இதற்கு முன் கள்ளக்குறிச்சியில் டி.இ.ஓ.,வாக பணியாற்றி உள்ளார்.தொடர்ந்து மாவட்டம் முழுவதும் மாணவர்கள் பள்ளிக்கு வருவது 100 சதவீதம் உறுதி செய்யப்படும். சிறப்புக்குழு அமைத்து பள்ளிகள் அனைத்தும் முறையாக கண்காணிக்கப்படும். அரசின் நலத்திட்ட உதவிகள் மாணவர்கள் அனைவருக்கும் கிடைத்திட செய்வேன். அரசின் அனைத்து திட்டங்களும் பள்ளிகளில் நடைமுப்படுத்தப்படும். 10, 12-ஆம் வகுப்பு பொது தேர்வில் மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த நடவடிக்கை எடுப்பேன் எனக் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ