உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வீரட்டானேஸ்வரர் கோவிலில் மாசிமக விழா கொடியேற்றம்

வீரட்டானேஸ்வரர் கோவிலில் மாசிமக விழா கொடியேற்றம்

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் வீரட்டானேஸ்வரர் கோவிலில் மாசிமக விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.அதனையொட்டி, நேற்று காலை 6:00 மணிக்கு மூல மூர்த்திகளுக்கு அபிஷேகம், 7:30 மணிக்கு விக்னேஸ் வர பூஜை நடந்தது. 10:00 மணிக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க, பக்தர்களின் நமச்சிவாயா கோஷத்துடன் கொடி ஏற்றப்பட்டது. சோமஸ்கந்தர் சிறப்பு அலங்காரத்தில் கோவில் பிரகார வலம் வந்தார்.இரவு 8:00 மணிக்கு பஞ்சமூர்த்திகள், அதிகார நந்தி வாகனம், அன்ன வாகனத்தில் வாணவேடிக்கையுடன் வீதியுலா நடந்தது.திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். முக்கிய நிகழ்ச்சியாக வரும் 11ம் தேதி தேரோட்டமும், 12ம் தேதி தென்பெண்ணையாற்றில் மாசி மக தீர்த்தவாரி உற்சவமும் நடக்கிறது.விழாவிற்கான ஏற்பாடு களை இந்து சமய அறநிலைத்துறை மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை