உள்ளூர் செய்திகள்

மருத்துவ முகாம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு கல்லுாரி விடுதியில் தங்கி பயிலும் மாணவர்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.முகாமிற்கு, அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ஜெனிபர் ராகுல் தலைமை தாங்கினார். முகாமில், மாணவர்களின் உடல் நலன் பரிசோதித்து, காய்ச்சல், தலைவலி, உடல்வலி உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டோருக்கு மாத்திரை, மருந்து வழங்கப்பட்டது.தொடர்ந்து, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவி விடுதியில் ஆய்வு மேற்கொண்டு, சமையலறை, மாணவர்கள் தங்கும் இடம், கழிப்பறை, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் வளாகத்தை சுத்தமான முறையில் பராமரிக்குமாறு விடுதி காப்பாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.நிகழ்ச்சியில், விடுதி வார்டன் வேல்முருகன், செவிலியர் அம்பிகேஸ்வரி, மருந்தாளுனர்கள் மணிகண்டன், ராதா, சுகாதார ஆய்வாளர் அரவிந்தன், விடுதி உதவியாளர் ராமமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி