உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மினி டேங்க் பழுது பொதுமக்கள் அவதி

மினி டேங்க் பழுது பொதுமக்கள் அவதி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகில், போர்வெல் 'மினி' டேங்க் பழுதானதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.கள்ளக்குறிச்சி, மந்தைவெளி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், நகராட்சி மூலம் வழங்கப்படும் தண்ணீர் மட்டுமின்றி போர்வெல் 'மினி' டேங்க் மூலம் தண்ணீர் பிடித்துவந்தனர். இந்நிலையில் இங்குள்ள போர்வெல் மினிடேங்க் கடந்த சில தினங்களுக்கு முன் பழுதானது. இதனால், இப்பகுதி மக்கள் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். தண்ணீர் பிடிக்க பல்வேறு இடங்களுக்கு செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை