உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாதிரி நாடாளுமன்ற தேர்தல்

அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாதிரி நாடாளுமன்ற தேர்தல்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் துறை சார்பில் மாணவிகளுக்கு நடந்த மாதிரி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு எம்.பி., பதவி பிரமாணம் செய்து வைத்தார்.கள்ளக்குறிச்சி அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு தலைமை பண்புகளை வளர்க்கவும், பிரச்னைகளுக்கு அவர்களே தீர்வு காணவும், சிறந்த, சரியான முடிகள் எடுக்கவும், எதிர்காலத்தில் வெற்றிகரமாக திட்டமிடுவதற்கும் மாணவர்கள் மாதிரி நாடாளுமன்ற தேர்தல் பொதுத் தேர்தல் போன்று நடத்தப்பட்டது.தேர்தலில் வெற்றி பெற்ற 32 பேருக்கு கள்ளக்குறிச்சி எம்.பி., மலையரசன் பதவி பிராமணம் செய்து வைத்தார்.தொடர்ந்து, பள்ளிக்கு 10.50 லட்சம் ரூபாய் மதிப்பில் 50 பெஞ்ச் டெஸ்குகளை எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து வழங்கினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியர் கீதா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கென்னடி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை