உள்ளூர் செய்திகள்

தாய்மொழி நாள் விழா

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் கோவல் தமிழ்ச் சங்கம் சார்பில், உலக தாய்மொழி நாள் விழா கொண்டாடப்பட்டது.அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் நடந்த விழாவிற்கு, உதவி தலைமை ஆசிரியர் கார்த்திக் வரவேற்றார். சங்க தலைவர் உதியன் கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டி பேசினார். சங்க செயலாளர் பாரதி மணாளன், கவிஞர் உலகமாதேவி துவக்க உரையாற்றினர்.நகர மன்ற துணைத் தலைவர் உமா மகேஸ்வரி குணா, பட்டதாரி உதவி தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி, ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கல்யாண் குமார் முன்னிலை வகித்தனர். நகர மன்ற சேர்மன் முருகன், போட்டியில் வெற்றி பெற்ற 51 மாணவிகளுக்கு விருது மற்றும் வெள்ளி பதக்கம் வழங்கி பாராட்டினார். சங்க துணைத் தலைவர் கார்த்திகேயன், முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ