மேலும் செய்திகள்
புதுச்சேரி மேரி ஹாலில் சான்றிதழ் வழங்கல்
20-Feb-2025
ரிஷிவந்தியம்:' சேரந்தாங்கலில்,13 ஆண்டுகளுக்கு பின் நடந்த முனியப்பன் கோவில் திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ரிஷிவந்தியம் அடுத்த லா.கூடலுார் பஞ்சாயத்துக்குட்பட்ட சேரந்தாங்கல் ஏரிக்கரையில் பழமை வாழ்ந்த முனியப்பன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடி மாதத்தில், முப்பூஜை திருவிழா நடப்பது வழக்கம். இதற்காக கோவிலுக்கு எதிரே உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில் சூலம் வைத்து, சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடைபெறும். அரசு இடத்திற்கு அருகே விளைநிலம் வைத்திருக்கும் மாற்று மதத்தினர் கடந்த, 2012ம் ஆண்டு இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்நிலையில் சுவாமி வழிபாட்டிற்கு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு அனுமதி பெறப்பட்டது. இதையடுத்து, 13 ஆண்டுகளுக்கு பிறகு முப்பூஜை திருவிழா நேற்று நடந்தது. மக்கள் ஊர்வலமாக கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்து, நேர்த்தி கடன் செலுத்தி வழிபாடு செய்தனர். எஸ்.பி., ரஜத்சதுர்வேதி ஏ.டி.எஸ்.பி, சரவணன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
20-Feb-2025