வணிக வளாக கட்டடம் திறப்பு
சின்னசேலம்; சின்னசேலத்தில், பி.டி.ஓ., அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள, 10 கடைகளுடன் கூடிய வணிக வளாக கட்டடம், கடந்த சில மாதங்களுக்கு முன் புனரமைக்கப்பட்டு, பொது ஏலம் விடப்பட்டது. இந்நிலையில், ஏலம் எடுத்தவர்களின் பயன்பாட்டிற்காக நேற்று திறந்து வைக்கப்பட்டது. இதில், ஒன்றிய சேர்மன் சத்தியமூர்த்தி தலைமை தாங்கி, வணிக வளாக கட்டடத்தை திறந்து வைத்தார். துணை சேர்மன் அன்புமணிமாறன், பி.டி.ஓ., ரங்கராஜன் முன்னிலை வகித்தனர். பி.டி.ஓ., சவரிராஜன் வரவேற்றார். நிகழ்ச்சியில் ஒன்றிய பொறியாளர் ராமு, மாவட்ட கவுன்சிலர் கலையரசி, ஒன்றிய கவுன்சிலர்கள் தமிழ்மணி, சித்ரா, ராஜேஸ்வரி, பெரியசாமி, கோவிந்தராஜ், சுதாமணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். துணை பி.டி.ஓ., பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.