பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்கியது 18,228 பேர் பங்கேற்பு: 524 பேர் ஆப்சென்ட்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 74 தேர்வு மையங்களில் நடந்த பிளஸ் 2 பொதுத்தேர்வில் 18 ஆயிரத்து 228 மாணவ, மாணவியர் தேர்வெழுதினர். 524 பேர் பங்கேற்கவில்லை.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 74 தேர்வு மையங்களில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நேற்று துவங்கியது. 124 மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து 9,183 மாணவர்கள், 9,569 மாணவியர் என 18 ஆயிரத்து 752 பேரும், தனித்தேர்வர்கள் 150 ஆண்கள், 109 பெண்கள் என 214 பேரும் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.நேற்று காலை தேர்வு தொடங்கிய நிலையில், 8,910 மாணவர்கள், 9,318 மாணவியர் என மொத்தம் 18 ஆயிரத்து 228 பேர் தேர்வெழுதினர். 273 மாணவர்கள், 251 மாணவிகள் என 524 பேர் தேர்வுக்கு வரவில்லை. அதேபோல் தனித்தேர்வர்களில் 90 ஆண்கள், 94 பெண்கள் என 184 பேர் நேற்று தேர்வெழுதினர். 30 பேர் தேர்வுக்கு வரவில்லை. கலெக்டர் ஆய்வு
சின்னசேலம் அடுத்த கோமுகி அணை அரசு பழங்குடியினர் உண்டு, உறைவிடப் பள்ளியில் நடந்த தேர்வினை கலெக்டர் பிரசாந்த் ஆய்வு செய்தார். சி.இ.ஓ., கார்த்திகா உடனிருந்தார்.தொடர்ந்து கலெக்டர் கூறுகையில், 'தேர்வு பணி செயல்பாட்டை கண்காணிக்க பள்ளிக்கல்வித் துறை சார்பில் இயக்குனர் நாகராஜ முருகன் கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். அனைத்து தேர்வு மையங்களையும் பார்வையிட 6 பறக்கும் படை குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 2000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் பொதுத்தேர்வு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்' என்றார்.