உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சிறுமிக்கு பாலியல் தொல்லை சிறுவன் மீது போக்சோ வழக்கு

சிறுமிக்கு பாலியல் தொல்லை சிறுவன் மீது போக்சோ வழக்கு

கள்ளக்குறிச்சி,; சின்னசேலம் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சிறுவன் மீது, போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த நான்கரை வயது சிறுமி. இவர், கடந்த டிசம்பர் மாதம் 13ம் தேதி விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன், சிறுமியை தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.இது குறித்து சிறுமியின் தாய் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் சிறுவன் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ