உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வாலிபர் மர்ம சாவு போலீசார் விசாரணை

வாலிபர் மர்ம சாவு போலீசார் விசாரணை

கள்ளக்குறிச்சி, : கீழ்குப்பம் அருகே ஆண் நபர் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.சேலம் மாவட்டம், தலைவாசல் அடுத்த ஊனத்துரை சேர்ந்தவர் மணியன் மகன் செந்தில்குமார்,39; உடல்நிலை சரியில்லாத இவர், கள்ளக்குறிச்சி மாவட்டம் குரால் கிராமத்தில் உள்ள பாட்டி பூங்காள் வீட்டில் தனியாக வசித்து வந்தார். செந்தில்குமார் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம், பக்கத்தினர் சந்தேகமடைந்து கீழ்குப்பம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில், போலீசார் சென்று பார்த்ததில் வீட்டின் பின்புறம் இறந்து, அழுகிய நிலையில் செந்தில்குமார் உடல் இருந்தது தெரிந்தது. இதனையடுத்து போலீசார் செந்தில்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து, அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரித்து வருகினறனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை