உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கழிவு நீர் கால்வாய் சீரமைப்பு

கழிவு நீர் கால்வாய் சீரமைப்பு

கள்ளக்குறிச்சி: தினமலர் செய்தி எதிரொலியால் கள்ளக்குறிச்சி துருகம் சாலையில் கழிவு நீர் கால்வாய் சீரமைக்கப்பட்டது.கள்ளக்குறிச்சி நகர பகுதிகளில் குடியிருப்புகள் மற்றும் ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள் அதிகளவில் உள்ளன. கழிவு நீர் வெளியேறுவதற்கு தேவையான கால்வாய் முறையான கட்டமைப்பு வசதியின்றி உள்ளது. இதனால் துருகம் சாலையோரம் செல்லும் கழிவு நீர் கால்வாய் அதிகளவிலான மண் குவியல்கள் மட்டுமின்றி பல இடங்களில் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் அடைந்து காணப்பட்டது.இதனால், மழை காலங்களில் கழிவு நீர் கால்வாய் நிரம்பி சாலையிலும், குடியிருப்புகளுக்கு இடையே குளம் போல் தேங்கியது. கழிவு நீர் கால்வாய் பிளாஸ்டிக் அடைப்பு தொடர்பாக தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.இதனையடுத்து நகராட்சி நிர்வாகம் சார்பில் ஜேசிபி இயந்திரம் மூலம் துருகம் சாலையில் கழிவு நீர் கால்வாய் பகுதியில் உள்ள செடி கொடிகள், குப்பைகள் மற்றும் மண்குவியல்களை அகற்றி சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை