உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சங்கராபுரத்திற்கு போக்குவரத்து போலீசார் நியமிக்க கோரிக்கை

சங்கராபுரத்திற்கு போக்குவரத்து போலீசார் நியமிக்க கோரிக்கை

சங்கராபுரம்: சங்கராபுரம் வேகமாக வளர்ந்து வரும் நகரமாகும். சங்கராபுரம் வழியாக கள்ளக்குறிச்சி மற்றும் பல ஊர்களுக்கு தினசரி காலை மற்றும் மாலை நேரங்களில் 100 க்கும் மேற்பட்ட பள்ளி,கல்லுாரி பேருந்துகள் செல்கின்றன.இந்த நேரங்களில் சாலையில் இரு புறமும் ஆக்கிரமிப்பு செய்து இரு சக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் சாலை குறுகி முன்னே வரும் வாகனத்திற்கு வழிவிட முடியாதநிலையில் போக்குவரத்து தினசரி பாதிக்கிறது.இதனை சரி செய்ய போக்குவரத்து போலீசார் சங்கராபுரத்திற்கு கிடையாது. மாவட்டம் உதயமாகி 5 ஆண்டுகள் ஆகியும் சங்கராபுரத்திற்கு போக்குவரத்து போலீசார் நியமிக்கப்படவில்லை.எனவே சங்கராபுரத்தில் தினசரி ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போக்குவரத்து போலீசார் நியமிக்க எஸ்.பி., துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை