உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஊராட்சிகளில் விளையாட்டு மைதானம் அமைக்க கோரிக்கை

ஊராட்சிகளில் விளையாட்டு மைதானம் அமைக்க கோரிக்கை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊராட்சிகளில், விளையாட்டு மைதானம் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த, 2006 - -2011ம் ஆண்டு தி.மு.க., ஆட்சி காலத்தில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் அனைத்து ஊராட்சிகளிலும் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டது.ஊராட்சிகளில் காலியாக உள்ள பொது இடம் சுத்தம் செய்யப்பட்டு தேவையான உபகரணங்கள் அமைக்கப்பட்டு விளையாட்டு மைதானமாக மாற்றப்பட்டது. கிராமப்பகுதி பள்ளி, கல்லுாரி மாணவர்கள் விடுமுறை தினங்களில், அங்கு விளையாடினர். மேலும் உடற்பயிற்சியிலும் ஈடுபட்டனர். இந்த உபகரணங்களை பராமரிக்க ஆண்டுதோறும் நிதி ஒதுக்கப்பட்டது.நாளடைவில் முறையான பராமரிப்பு இல்லாததால், மைதானத்தில் நடப்பட்ட இரும்பு பொருட்கள் துருப்பிடித்து மக்கியது. காலப்போக்கில் விளையாட்டு உபகரண பொருட்கள் முற்றிலுமாக அகற்றப்பட்டன. கிராமங்களில், வரவேற்பை பெற்ற இத்திட்டம், தற்போது நடைமுறையில் இல்லை. இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பரிசீலித்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ