மேலும் செய்திகள்
லஞ்ச வழக்கில் கைதான செயல் அலுவலர் 'சஸ்பெண்ட்'
28-Aug-2024
லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., பெண் அதிகாரி கைது
21-Aug-2024
கள்ளக்குறிச்சி: உளுந்துார்பேட்டையில் லஞ்ச வழக்கில் சிக்கிய முதுநிலை வருவாய் ஆய்வாளர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். உளுந்துார்பேட்டை தாலுகா அலுவலகத்தில் கடந்த 21ம் தேதி இறப்பு சான்றிதழ் விண்ணப்பத்தை ஆன்லைனில் பதிவேற்ற முதுநிலை வருவாய் ஆய்வாளர் ராஜவேல், தற்காலிக ஊழியர் சரஸ்வதி மூலம் ரூ.1,500 லஞ்சம் வாங்கினார். அவரை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.இவ்வழக்கில் தொடர்புடைய முதுநிலை வருவாய் ஆய்வாளர் ராஜவேலை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் தேடிவந்தனர்.இந்நிலையில் ராஜவேல் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து, அவரை தற்காலிக பணிநீக்கம் செய்து டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன் உத்தரவிட்டுள்ளார்.
28-Aug-2024
21-Aug-2024