உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஜே.எஸ்., பள்ளியில்நாடக நிகழ்ச்சி

ஜே.எஸ்., பள்ளியில்நாடக நிகழ்ச்சி

கள்ளக்குறிச்சி: ஜே.எஸ்., பள்ளியில் ‘வண்டர் வில்’ என்ற தலைப்பில் நாடக நிகழ்ச்சிகள் நடந்தது. கள்ளக்குறிச்சி அருகே நீலமங்கலம் புறவழிச்சாலையில் உள்ள ஜே.எஸ்., குளோபல் அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயலட்சுமி தலைமை தாங்கினார். துணை முதல்வர் பாபு முன்னிலை வகித்தார். பள்ளியில் எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி., பயிலும் மாணவர்களுக்கு பல்வேறு செயல்பாடுகளை தெரியப்படுத்தும் வகையில் ‘வண்டர் வில்’ என்ற தலைப்பில் நாடக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதற்காக, நீதிமன்றம், மருத்துவமனை, உயிரியல் பூங்கா, இயற்கை விவசாயம் உட்பட பல்வேறு வகைகளாக மாற்றம் செய்யப்பட்டது. நீதிமன்றத்தில் வழக்குகள் எவ்வாறு வாதாடப்படுகிறது என்பதை தெரியப்படுத்தும் வகையில் நாடகம் நடத்தப்பட்டது. அதேபோல், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை எவ்வாறு அனுமதித்து சிகிச்சை அளிப்பது, போக்குவரத்து போலீசாரின் பணிகள் என்ன, விவசாயம் செய்யும் வழிமுறைகள், உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை பராமரிப்பது போன்ற நாடகங்களும் நடந்தது. நாடகத்திற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ