பள்ளி மேலாண்மைக்குழு புதிய நிர்வாகிகள் தேர்வு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.கள்ளக்குறிச்சி அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில், பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு கூட்டம் நடந்தது. தலைமை ஆசிரியர் கீதா தலைமையில் மேலாண்மைக்குழுவின் புதிய நிர்வாகிகள் தேர்தல் நடத்தப்பட்டது.தேர்தலில் விருப்பம் தெரிவித்தவர்களுக்கு பள்ளி மாணவிகளின் பெற்றோர்கள் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்தனர்.அதன்படி புதிய தலைவராக இளவரசி, துணைத் தலைவராக மணிமேகலை மற்றும் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.நிகழ்ச்சியில் உதவி தலைமை ஆசிரியைகள் சுதா, வசந்தா, கவுன்சிலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். முத்துக்கிருஷ்ணன் நன்றி கூறினார்.தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் அனைவரும் பள்ளி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பதாக உறுதி அளித்தனர்.