உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சங்கராபுரத்தில் சித்த மருத்துவ கட்டடம் திறப்பு

சங்கராபுரத்தில் சித்த மருத்துவ கட்டடம் திறப்பு

சங்கராபுரம் : சங்கராபுரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் சிறிய அறையில் சித்த மருத்துவ பிரிவு இயங்கியது. இதனால், இட பற்றாக்குறையால் நோயாளிகள் அவதியடைந்து வந்தனர். இதையடுத்து, 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சித்த மருத்துவ பிரிவிற்கு புதியதாக கட்டடம் கட்டப்பட்டது. நேற்று புதிய கட்டடம் திறப்பு விழா நடந்தது.கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். ஒன்றிய சேர்மன் திலகவதி நாகராஜன், பேருராட்சி சேர்மன் ரோஜாரமணி தாகப்பிள்ளை, தி.மு.க., நகர செயலாளர் துரை, தலைமை மருத்துவ அலுவலர் ராஜ்மோகன் முன்னிலை வகித்தார். சித்த மருத்துவ அலுவலர் அறிவழகன் வரவேற்றார். உதயசூரியன் எம்.எல்.ஏ., புதிய சித்த மருத்துவ பிரிவு கட்டடத்தை திறந்து வைத்து பேசினார். இதில் தொழிலதிபர் கதிரவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை