உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஊராட்சி தலைவர்களுக்குவிளையாட்டு உபகரணங்கள்

ஊராட்சி தலைவர்களுக்குவிளையாட்டு உபகரணங்கள்

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் பி.டி.ஓ., அலுவலகத்தில் ஊராட்சி தலைவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஒன்றிய சேர்மன் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். துணை பி.டி.ஓ., ரங்கசாமி முன்னிலை வகித்தார். அலுவலர் கார்த்தி வரவேற்றார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில், சின்னசேலம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் விளையாட்டு உபகரண பொருட்கள் ஒதுக்கப்பட்டன.அதன்படி, ஒவ்வொரு ஊராட்சிக்கும் கிரிக்கெட் பேட், ஸ்டம்ப் உள்ளிட்ட உபகரணங்கள், வாலிபால், வலை, இறகுப்பந்து, கேரம் போர்டு, செஸ், சிலம்பக்குச்சி உட்பட தலா ரூ.30 ஆயிரம் மதிப்பில், பொருட்கள் வழங்கப்பட்டன.இந்த உபகரணங்கள், ஊராட்சி தலைவர்களுக்கு வழங்கப்பட்டன. அவரவர் ஊரில் உள்ள விளையாட்டு அணிகள் மற்றும் வீரர்களுக்கு பிரித்து தர அறிவுறுத்தப்பட்டது. இதில் ஊராட்சி தலைவர்கள் சிவஞானம், முருகேசன், மாவட்ட பிரதிநிதி பெரியசாமி, கிளை செயலாளர்கள் மாயகண்ணன், ராஜிவ்காந்தி, பெரியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை