உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு மன அழுத்த மேலாண்மை பயிற்சி வகுப்பு

ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு மன அழுத்த மேலாண்மை பயிற்சி வகுப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் ரேஷன்கடை விற்பனையாளர்களுக்கு மனஅழுத்த மேலாண்மை மற்றும் ரேஷன் கார்டுதாரர்களிடம் நடந்து கொள்ள வேண்டிய நெறிமுறைகள் குறித்து பயிற்சி வகுப்பு நடந்தது.கள்ளக்குறிச்சியில் ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு நடந்த பயிற்சி வகுப்பிற்கு கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் தலைமை தாங்கினார். மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சுப்ரமணியன் முன்னிலை வகித்தார். பொது விநியோக திட்ட துணைப் பதிவாளர் சுரேஷ் வாழ்த்திப் பேசினார்.சிறப்பு அழைப்பாளராக மின்வாரிய ஊழியர் ஜெகதீசன் மற்றும் பேராசிரியை ஜெயந்தி ஆகியோர் பங்கேற்று, மன அழுத்த மேலாண்மை குறித்தும், அத்தியாவசிய பொருட்களை வாங்க வரும் கார்டுதாரர்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டிய நெறிமுறைகள் குறித்தும் விளக்கி கூறினர்.தொடர்ந்து, மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த ரேஷன்கடை விற்பனையாளர்களை பாராட்டி நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க ஊழியர்கள், ரேஷன்கடை விற்பனையாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை