உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தொழிற்பேட்டைக்கு இடையூறு செய்தால் கடும் நடவடிக்கை

தொழிற்பேட்டைக்கு இடையூறு செய்தால் கடும் நடவடிக்கை

கள்ளக்குறிச்சி, ; காட்டுவன்னஞ்சூர் சிட்கோ தொழிற்பேட்டை தொழில் நிறுவனங்களின் செயல்பாடுகளில் இடையூறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் பிரசாந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.அவரது செய்திக்குறிப்பு: சங்கராபுரம் அடுத்த காட்டுவனஞ்சூர் கிராமத்தில் 2014-ம் ஆண்டு 42 ஏக்கர் பரப்பளவில் சிட்கோ தொழிற்பேட்டை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 28 தொழில்மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இத்தொழிற்பேட்டையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொழில் முனைவோர்கள், தொழில் நிறுவனங்களின் நடவடிக்கைகளில் தனிநபர்கள் இடையூறு செய்வதாக புகார் வரப்பெற்றுள்ளது. இந்த நடவடிக்கைகளால், தொழில் வளர்ச்சி தடைபடுவதுடன், உள்ளூர் மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது.எனவே தொழிற்பேட்டையின் பாதுகாப்பு மற்றும் சீரான செயல்பாட்டை உறுதி செய்யும் வகையில், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.எனவே காட்டுவனஞ்சூர் சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள தொழில் நிறுவனங்களின் செயல்பாடுகளில் தேவையின்றி இடையூறு செய்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி