| ADDED : ஆக 21, 2024 06:59 AM
கள்ளக்குறிச்சி : மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களை பணிநிரந்தரம் செய்யக்கோரி குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கள்ளக்குறிச்சி மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் நடந்த போராட்டத்திற்கு, மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். நிர்வாகி சுதாகர் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் செந்தில் வரவேற்றார்.மாநில துணைத் தலைவர் அம்பிகாபதி, மாவட்ட செயலாளர் ராஜாமணி ஆகியோர் கோரிக்கை வலியுறுத்தி பேசினர். மாவட்ட செயலாளர் சீனிவாசன், துணைத் தலைவர் சலீம், பொருளாளர் வெங்கடேசன், துணைத் தலைவர் ஏழுமை, துணைச் செயலாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.போராட்டத்தில், மின் வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். ஒப்பந்தப்படி தினக்கூலியை வாரியமே வழங்க வேண்டும். காலியாக உள்ள களப்பணியில் ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.