மேலும் செய்திகள்
மாணவி பாலியல் பலாத்காரம்தொழிலாளி தலைமறைவு
09-Mar-2025
கள்ளக்குறிச்சி : 11 வயது பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த விவசாயியை, போலீசார் போக்சோவில் கைது செய்து விசாரிக்கின்றனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த எறையூரை சேர்ந்தவர் பெலிக்ஸ், 37; விவசாயி. இவரது நிலத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள தர்பூசணியை, 6ம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி, நேற்று முன்தினம் இரவு பறித்துள்ளார். அப்போது, பெலிக்ஸ் அந்த சிறுமியிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார்.புகாரின்பேரில், உளுந்துார்பேட்டை மகளிர் போலீசார் வழக்கு பதிந்து, போக்சோவில் பெலிக்சை கைது செய்தனர்.
09-Mar-2025