தமிழக பட்ஜெட் தாக்கல்; சின்னசேலத்தில் நேரடி ஔிபரப்பு
கள்ளக்குறிச்சி; சின்னசேலம் பஸ் நிலையத்தில் பட்ஜெட் தாக்கல் நிகழ்வை நேரலையில் பொதுமக்கள் பார்வையிட்டனர். தமிழக சட்டசபையில், 2025 - 26ம் ஆண்டுக்கான பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதையொட்டி, சின்னசேலம் பஸ் நிலையத்தில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில், பட்ஜெட் தாக்கல் நேரலையில் காணொளி காட்சி மூலம் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பேரூராட்சி செயல் அலுவலர் அண்ணாமலை மேற்கொண்டார். பஸ் நிலையத்தில் நேரலையில் ஒளிபரப்பிய பட்ஜெட் தாக்கலை சின்னசேலம் ஒன்றிய, நகர தி.மு.க.,வினர், பயணிகள் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.