மேலும் செய்திகள்
ஸ்கூட்டி மீது டிராக்டர் மோதல்
27-Feb-2025
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் போராட்டம் அமைதி பேச்சுவார்த்தையால் ஒத்திவைக்கப்பட்டது.கள்ளக்குறிச்சி, காந்தி ரோடு தலைமை தபால் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து பா.ம.க., சார்பில் நேற்று மாலை பூட்டு போடும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர். இதனையடுத்து நேற்று காலை கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் அமைதி கூட்டம் தாசில்தார் பசுபதி தலைமையில் நடந்தது. டாஸ்மாக் மாவட்ட மேலாளர் விஜயசண்முகம், கோட்ட கலால் அலுவலர் சிவசங்கரன் மற்றும் பா.ம.க., முன்னாள் மாவட்ட செயலாளர் ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், விரைவில் மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டு டாஸ்மாக் கடையை இடம் மாற்றம் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதனையடுத்து பா.ம.க,வினர் தற்காலிகமாக பூட்டு போடும் பேராட்டத்தை ஒத்தி வைத்தனர்.
27-Feb-2025