உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மதுபோதையில் பூச்சி மருந்து குடித்து வாலிபர் தற்கொலை

மதுபோதையில் பூச்சி மருந்து குடித்து வாலிபர் தற்கொலை

கள்ளக்குறிச்சி: கல்வராயன்மலையில் மதுபோதையில் பூச்சி மருந்து குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் தணிவேல் மகன் மணிகண்டன், 32; இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது. இவர், கடந்த 11ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம், மண்டகபாடி கிராமத்திற்கு உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு வந்துள்ளார்.அன்றிரவு மதுகுடித்து விட்டு அதே பகுதியில் உள்ள தனது மாமனாரின் காட்டுகொட்டாய்க்கு சென்றவர், போதையில் பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்தார். உடன், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். புகாரின் பேரில் கரியாலுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ