மேலும் செய்திகள்
வீட்டின் சீல் உடைப்பு: தம்பதி மீது வழக்கு
26-Aug-2024
கணவர் மாயம் மனைவி புகார்
30-Aug-2024
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் கடன் பணத்தை தருவதாக, பைக்கை ஏமாற்றி எடுத்து சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி துருகம் ரோடு சேர்ந்த ராஜசேகர் மகன் நிஜந்தன்,33; இவர் அதே பகுதியில் மொபைல் ஷாப் வைத்துள்ளார். கடந்த 28 ம் தேதி இவரது கடைக்கு வந்த ஏமப்பேர் பள்ளிக்கூட தெரு சேர்ந்த ஏழுமலை மகன் முத்துக்குமார்(எ) ராக்கெட் ராஜா,27; ஏற்கனவே கடனாக வாங்கிய மொபைலுக்கான பணம் ரூ.17 ஆயிரம் மற்றும் ஸ்பீக்கர் வாங்கியதற்கான பணம் ரூ.1,100 ஆகியவற்றை கேட்டுள்ளார். அப்போது முத்துக்குமார் வீட்டில் பணம் உள்ளதாகவும், வாகனத்தை கொடுத்தால் வீட்டிற்கு சென்று பணம் எடுத்து வந்து தருவதாக கூறியுள்ளார். இதனை நம்பிய நிஜந்தன் தனது யமகா பைக்கினை கொடுத்துள்ளார். பின்னர் நீண்ட நேரமாகியும் பைக்கினை எடுத்து வந்து தராமல் ஏமாற்றியது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து முத்துக்குமாரை கைது செய்தனர்.
26-Aug-2024
30-Aug-2024