உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வாசவி, வனிதா கிளப் ஆளுநர் வருகை விழா

வாசவி, வனிதா கிளப் ஆளுநர் வருகை விழா

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் வாசவி, வனிதா கிளப் சார்பில் ஆளுநர் வருகை விழா நடந்தது. வாசவி சங்கத் தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். செயலாளர் மோகன், பொருளாளர் கோபால்சாமி, வனிதா சங்கத் தலைவி பாலசரண்யா, செயலாளர் அஸ்வினி முன்னிலை வகித்தனர். பொருளாளர் விஜயலட்சுமி வரவேற்றார். மாவட்ட ஆளுநர் ஆதிசேஷன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, முதன்மை சேவை திட்டமான திருக்கோவிலுார் அரசு மருத்துவமனைக்கு நோயாளிகள் அமர்வதற்காக ஐந்து இருக்கைகளை வழங்கினார்.அரசு மருத்துவமனை பொறுப்பு முதன்மை மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜவிநாயகம் பெற்றுக் கொண்டார்.மண்டல தலைவர் ராஜாசுப்ரமணியம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை