உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கணவர் மாயம் மனைவி புகார்

கணவர் மாயம் மனைவி புகார்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கணவரை காணவில்லை என, மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.கள்ளக்குறிச்சி, பால்ராம்பட்டை சேர்ந்தவர் முருகன் மகன் முனுசாமி,27. இவர் கடந்த 16ம் தேதி கோயம்புத்துாருக்கு வேலைக்கு செல்வதாக மனைவியிடம் தெரிவித்துவிட்டு சென்றார். கள்ளக்குறிச்சி பஸ்நிலையத்தில் இருந்து தகவல் தெரிவித்த முனுசாமி மீண்டும் மனைவியை தொடர்புகொள்ளவில்லை. நீண்ட நேராகியும் முனுசாமி தொடர்பு கொள்ளாததால் அச்சமடைந்த அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது மனைவி கலையரசி அளித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை