உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஸ்கூட்டர் சக்கரத்தில் சேலை சிக்கி கீழே விழுந்த பெண் பரிதாப பலி

ஸ்கூட்டர் சக்கரத்தில் சேலை சிக்கி கீழே விழுந்த பெண் பரிதாப பலி

ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அருகே ஸ்கூட்டரின் பின்பக்க டயரில் சேலை சிக்கியதால் கீழே விழுந்து காயமடைந்த பெண் இறந்தார்.ரிஷிவந்தியம் அடுத்த வடதொரசலுாரைச் சேர்ந்தவர் சேட்டு மனைவி பிரியதர்ஷினி, 36; இருவரும் கடந்த 21ம் தேதி ஸ்கூட்டரில் ரிஷிவந்தியம், அ.பாளையத்தில் இருந்து உதயமாம்பட்டு நோக்கிச் சென்றனர்.வெங்கலம் அருகே சென்ற போது, பின்னால் அமர்ந்து சென்ற பிரியதர்ஷினி அணிந்திருந்த சேலை, பின் சக்கரத்தில் சிக்கியது. இதில் கீழே விழுந்த பிரியதர்ஷினிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடன் சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர், நேற்று இறந்தார்.புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை