மேலும் செய்திகள்
சமுதாய அமைப்பாளர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
20-Aug-2024
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமுதாய அமைப்பாளர் பணிக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தில் வெளிமுகமை முறையில் ஒரு சமுதாய அமைப்பாளர் பணிக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம். ஏதேனும் ஒரு துறையில் பட்டப் படிப்பு மற்றும் அடிப்படை கணினி திறன்கள் முடித்திருக்க வேண்டும். மேலும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தை ஒத்த திட்டங்களில் குறைந்தபட்சம் ஒரு வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கணினி அறிவு கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.பகுதி அளவிலான கூட்டமைப்பின் உறுப்பினராக இருத்தல் வேண்டும். அந்த பகுதி அளவிலான கூட்டமைப்பிலிருந்து பரிந்துரை கடிதம் மற்றும் தீர்மானம் சமர்பிக்க வேண்டும். நல்ல தகவல் தொடர்பு திறன் கொண்ட நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இரு சக்கர வாகன உரிமம் பெற்றிருக்க வேண்டும்.விண்ணப்பதார்கள் மாவட்டத்திற்குள் மற்றும் 2 ஆண்டுகளுக்கு மேலாக உருவாக்கப்பட்ட பகுதி அளவிலான கூட்டமைப்பிலிருந்து வருவோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விண்ணப்பதாரர்களுக்கு அளிக்கப்படும் நிபந்தனை நிர்வாகம் மற்றும் நிதி முறைகேடுகள் TNSRLM/ Puthu Vaazhvu Project/ IFAD போன்ற திட்டங்களிலிருந்து நிறுத்தப்பட்டிருக்கவோ, அகற்றப்பற்றிருக்கவோ கூடாது.தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை வெள்ளைத்தாளில் தட்டச்சு செய்தோ அல்லது கையெழுத்து பிரதியாகவோ செயலாளர், மாவட்ட முகமை, கிராம ஊராட்சி சேவை மைய கட்டிடம், நிறைமதி (கிராமம்), நீலமங்கலம் (அஞ்சல்), கள்ளக்குறிச்சி மாவட்டம் - 606 213 என்ற முகவரிக்கு செப்.6ஆம் தேதி மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும் என கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
20-Aug-2024