ஆர்.கே.எஸ்., பள்ளியில் ஆசிரியர்களுக்கு பயிலரங்கம்
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி ஆர்.கே.எஸ்., மாஸ்டர்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்களுக்கான பயிலரங்கம் நடந்தது.பயிலரங்கத்திற்கு, கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் மோகனசுந்தரம் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் தனலட்சுமி வரவேற்றார். துணை முதல்வர் ஜீசஸ்சுஜி, பொறுப்பொறு ஆசிரியை ராகேல் ஜாய்ஸ்மேரி வாழ்த்திப் பேசினார்.சிறப்பு அழைப்பாளராக சேகர் பப்ளிஷர்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் அஜித்ஷிவ்குமார், விற்பனை பிரிவு தலைமை அதிகாரி சதீஷ்குமார் பங்கேற்று, மாணவர்களை கற்றலில் கவனம் செலுத்த வைப்பதற்கான நுணுக்கங்கள் குறித்தும், ஆக்கப்பூர்வமான திறன்களை வளர்த்து கொள்வது குறித்தும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தனர். பயிலரங்கத்தில் ஆசிரியர்கள் ஐஸ்வர்யா, கோமதி, மஞ்சுளா, தமிழரசி, சத்தியராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.