உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஓடும் லாரியில் 100 பெட்டி ஆயில் மாயம்

ஓடும் லாரியில் 100 பெட்டி ஆயில் மாயம்

சின்னசேலம்: சின்னசேலம் அருகே சமையல் எண்ணெய் லோடு ஏற்றி சென்ற லாரியிலிருந்து 100 எண்ணெய் பெட்டிகள் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.சின்னசேலம் அடுத்த மணிவிழுந்தான் காலனியை சேர்ந்தவர் அண்ணாமலை மகன் பாலசுப்பிரமணியன் 44, லாரி டிரைவரான இவர் கடந்த 5ம் தேதி திருவள்ளுர் மாவட்டம், பெரியபாளையத்தில் உள்ள தனியார் கம்பெனியில் இருந்து சமையல் எண்ணெய் லோடு ஏற்றிக்கொண்டு கேரளா மாநிலம் நோக்கி சென்றார்.அப்போது சார்வாய் புதுார் அருகே உள்ள டீக்கடையில் லாரியை நிறுத்திவிட்டு பார்த்துள்ளார். அப்போது லாரியின் பின்பகுதியில் தார்ப்பாய் கிழிக்கப்பட்டு அதிலிருந்து 100 பெட்டி சமையல் எண்ணெயை மர்ம நபர்கள் திருடி சென்றிருப்பது தெரிய வந்தது. இது குறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை