மேலும் செய்திகள்
குட்கா விற்ற பெண் கைது
28-Jul-2025
உளுந்துார்பேட்டை : திருநாவலுார் அருகே ஹான்ஸ் விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்து, 105 கிலோ குட்கா பறிமுதல் செய்தனர். உளுந்துார்பேட்டை அடுத்த பெரும்பாக்கம் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருநாவலுார் சப்இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் அப்பகுதியில் உள்ள கடையில் சோதனை செய்தனர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த வீரப்பன், 55; நடத்தி வரும் பெட்டி கடையில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் விற்பது தெரியவந்தது. கடையில் இருந்து 6 கிலோ குட்கா பறிமுதல் செய்து, வீரப்பனை கைது செய்தனர். வீரப்பனிடம் நடத்திய தீவிர விசாரணையில், கடலுார் மாவட்டம் பண்ருட்டி அடுத்த தட்டஞ்சாவடி பகுதியைச் சேர்ந்த முகமது யூசுப், 44; கடலுார் மாவட்டம் பண்ருட்டி, கடலுார் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த முகமதுஅன்சாரி, 58; ஆகியோரிடம் ஹான்ஸ் வாங்கி விற்பனை செய்தது தெரிய வந்தது. அதன் பேரில் முகமதுயூசுப், முகமதுஅன்சாரி ஆகியோரையும் கைது செய்தனர். இருவரிடம் இருந்து 99 கிலோ குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
28-Jul-2025