உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் 108 சங்காபிேஷக வைபவம்

அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் 108 சங்காபிேஷக வைபவம்

சின்னசேலம் ; உலகியநல்லுார் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் 108 வலம்புரி சங்காபிேஷகம் நடந்தது.சின்னசேலம் அடுத்த உலகியநல்லுார் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாதம் இரண்டாவது வார சோமவார பூஜை நடந்தது. நிகழ்ச்சியில், 108 வலம்புரி கலசங்கள் ஆவாகனம் செய்து, சிவபார்வதி ஹோமம் செய்து பூஜைகள் நடந்தது. மூலவருக்கு 17 வகையான சிறப்பு அபிேஷகம் மற்றும் 108 வலம்புரி சங்குகள் பூஜையில் வைத்து பின் சுவாமிக்கு அபிேஷகம் நடந்தது. பூஜைகளை ஜெயக்குமார் குருக்கள் செய்து வைத்தார். பூஜைக்கான ஏற்பாடுகளை கட்டளைதாரர்கள் செய்திருந்தனர். இதில் பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை