உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / விதிமீறி சென்ற பஸ் மீது லாரி மோதி 12 பேர் காயம்

விதிமீறி சென்ற பஸ் மீது லாரி மோதி 12 பேர் காயம்

உளுந்துார்பேட்டை; உளுந்துார்பேட்டை டோல்கேட் அருகே விதிமுறைகளை மீறி, சாலையின் குறுக்கே சென்ற தனியார் பஸ் மீது டேங்கர் லாரி மோதியதில், 12 பேர் படுகாயமடைந்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார் அடுத்த மணலுார்பேட்டையைச் சேர்ந்தவர் ராமதாஸ், 65; டேங்கர் லாரி டிரைவர். இவர், உளுந்துார்பேட்டை அடுத்த ஆசனுார் சிட்கோவில் இருந்து டீசல் ஏற்றிக்கொண்டு, நேற்று காலை விழுப்புரம் நோக்கி புறப்பட்டார்.காலை 11:25 மணிக்கு, உளுந்துார்பேட்டை டோல்கேட் அருகே உள்ள இணைப்புச் சாலை சந்திப்பு அருகே சென்றபோது, ஸ்ரீராமவிலாஸ் என்ற தனியார் பஸ், 55 பயணியருடன் கடலுாரில் இருந்து உளுந்துார்பேட்டைக்கு செல்வதற்காக விதிகளை மீறி, டோல்கேட் அருகே சாலையின் குறுக்கே கடந்தபோது, ராமதாஸ் ஓட்டிச் சென்ற டேங்கர் லாரி பஸ்சின் பக்கவாட்டில் மோதியது.இந்த விபத்தில் பஸ் டிரைவர் கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த சாத்தமாம்பட்டு மணிகண்டன், 35, உட்பட 12 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.விபத்து குறித்த உளுந்துார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை