உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  1,275 ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர் திருத்த பணியில் பங்கேற்பு

 1,275 ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர் திருத்த பணியில் பங்கேற்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறப்புத் தீவிரத் திருத்தம் பணிகளை 1,275 ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 4 சட்டசபை தொகுதிகளில் கடந்த 4ம் தேதி முதல் சிறப்புத் தீவிரத் திருத்தம் தொடர்பாக வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் வழங்கும் பணி நடந்து வருகிறது. இதில் 1,275 ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் திரும்ப பெறும் பணி நடந்து வருகிறது. இவர்களை கண்காணிக்க 129 மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக பி.எல்.ஓ., மொபைல் ஆப்பில் படிவங்கள் பதிவேற்றும் பணி நடந்து வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை