மேலும் செய்திகள்
மதுபாட்டில் விற்பனை : ஒருவர் கைது
06-Jun-2025
சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே குட்கா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.சங்கராபுரம் அடுத்த கடுவனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை மகன் சந்தோஷ்குமார், 21; இவர் அதே பகுதியில் பெட்டிக் கடை வைத்துள்ளார். இவரது கடையில் சப் இன்ஸ்பெக்டர் பிரபு நேற்று திடீர் சோதனை நடத்தினார். அதில், குட்கா விற்றது தெரியவந்தது. இதனையடுத்து சந்தோஷ்குமாரை கைது செய்து, ஒரு கிலோ மதிப்பிலான குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். விசாரணையில் செம்மராபட்டு கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் கோபிநாத், 42; என்பவரிடம் குட்கா பாக்கெட்டுகளை வாங்கி விற்பனை செய்தது தெரியவந்தது. அதனையடுத்து, கோபிநாத்தையும் கைது செய்து, ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.
06-Jun-2025