மேலும் செய்திகள்
மது விற்றவர் கைது
23-Oct-2024
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே மதுபாட்டில் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் விஜயராகவன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ரங்கநாதபுரம் சுடுகாடு அருகே மது பாட்டில் விற்ற ஆபேல் மகன் பெரியசாமி, 33; என்பவரை கைது செய்து, 5 மதுபாட்டில்கள், 2,050 ரூபாய் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.அதேபோல், மோகூரில் மதுபாட்டில் விற்ற ஆறுமுகம் மனைவி மாரியம்மாள், 64; என்பவரை கைது செய்து, அவரிடமிருந்த 4 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
23-Oct-2024