போக்குவரத்து விதி மீறிய 26 பேர் மீது வழக்குப்பதிவு
சங்கராபுரம்: சங்கராபுரத்தில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் போக்குவரத்து விதிமீறிய 26 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். சங்கராபுரம், கடைவீதி மும்முனை சந்திப்பில் இன்ஸ்பெக்டர் பாலமுரளி தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் ஏழுமலை, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், கோவிந்தராஜன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பைக்கில் ெஹல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியது, வேகமாக வாகனம் ஓட்டியது, லைசன்ஸ் இல்லாமல் ஓட்டியது, குடிபோதையில் வாகனம் ஓட்டியது, காரில் சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டியது என 26 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.