உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / திருக்கோவிலுாரில் வெளுத்து வாங்கிய மழையால் 3 கூரை வீடுகள் சேதம்

திருக்கோவிலுாரில் வெளுத்து வாங்கிய மழையால் 3 கூரை வீடுகள் சேதம்

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் விடிய விடிய வெளுத்து வாங்கிய கன மழையால் நான்கு வீடுகள் சேதமடைந்தன. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில், திருக்கோவிலுார் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு துவங்கிய மழை விடிய விடிய வெளுத்து வாங்கியது. கனமழை காரணமாக வடமருதுார், மேட்டுகாலனியைச் சேர்ந்த சுப்ரமணி மனைவி குப்பு, 55; ராஜன் மனைவி யசோதை, 65; ஆகியோரின் கூரை வீடுகள் மண் சுவர் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதே போல் அத்திப்பாக்கம் கிராமத்தில் பாவாடை மனைவி குமாரி, 35; என்பவருக்கு சொந்தமான தகர ஷீட்டின் ஒரு பக்க சுவர் சரிந்து விழுந்தது. நல்வாய்ப்பாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சொரையப்பட்டு கிராமத்தில் வையாபுரி மனைவி காசியம்மாள், 65; வீட்டிற்குள் தண்ணீர் புகுந்தது. ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் அப்பகுதியில் தேங்கிய மழைநீர் வடிவதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பாதிக்கப்பட்ட குடும்பங்களை வருவாய்த்துறையினர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண ஏற்பாடுகளை செய்தனர். நேற்றைய மழையால் வயல்வெளி மற்றும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது. இதனால் ஏரி, குளங்களுக்கான நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ