மேலும் செய்திகள்
குட்கா விற்பனை: இருவர் கைது
25-Jan-2025
உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டை அருகில் தடை செய்யப்பட்ட, 350 கிலோ குட்கா பதுக்கி வைத்திருந்த பெண் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.உளுந்தூர்பேட்டை அடுத்த ஒலையனுாரில், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பதாக வந்த புகாரை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் வீரமணி தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் பிரீத்தா மற்றும் போலீசார், ஒலையனுார் கிராம பெட்டி கடைகளில் சோதனை நடத்தினர். அதில், ராமமூர்த்தி என்பவரின் கடையில் விற்பனைக்கு ஹான்ஸ் வைத்திருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். அதனைத் தொடர்ந்து ராமமூர்த்தியை கைது செய்து விசாரித்தனர்.அதில், ஹான்ஸ் உள்ளிட்ட குட்கா பொருட்களை உளுந்தூர்பேட்டை அடுத்த, எம்.எஸ். தக்கா பகுதியில் உள்ள ஓட்டலில் பதுக்கி வைத்திருந்த 350 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, லட்சுமிதேவி,50; என்பவரை யும் கைது செய்தனர்.
25-Jan-2025