மேலும் செய்திகள்
குறைதீர் கூட்டத்தில் நலத்திட்ட உதவி வழங்கல்
14-Jan-2025
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் நடந்த பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில், 407 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்றார். நில அளவை, பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப் பட்டா, உதவித் தொகை, மகளிர் உரிமைத் தொகை, கடனுதவி, குடிநீர் பிரச்னை, சாலை வசதி, வேலை வாய்ப்பு என, பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 407 மனுக்கள் பெறப்பட்டது. தொடர்ந்து, மனுக்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்தில், மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் கீழ், இயற்கை மரணமடைந்த மாற்றத் திறனாளியின் வாரிசுக்கு நல வாரியத்தின் மூலம் ஈமச்சடங்கு உதவித் தொகை 17,000 ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. கூட்டத்தில் டி.ஆர்.ஓ., ஜீவா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) குப்புசாமி, உட்பட பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
14-Jan-2025