மாவட்டத்தில் பெஞ்சல் புயல் மழை பாதிப்பு 434 குடும்பங்கள் முகாம்களில் தங்கவைப்பு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புயல் மழையால் பாதிக்கப்பட்ட 434 குடும்பங்கள் பாதுகாப்பாகதங்கவைக்கப்பட்டுள்ளன.இதுகுறித்து கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெஞ்சல் புயல் மழையால்பாதிக்கப்பட்ட 434 குடும்பங்கள் 10 நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளன.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புயல் காரணமாக பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருகிறது. அதன் காரணமாகதென்பெண்ணையாறு, வெள்ளாறு உள்ளிட்ட மாவட்டத்திலுள்ள ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. மேலும் வீடுகள் சேதம், கால்நடை இழப்பு உள்ளிட்டவைகளுக்கு உடனுக்குடன் கணக்கெடுப்பு செய்து உரிய நிவாரணஉதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டத்தில் வாணாபுரம், மூங்கில்துறைப்பட்டு, சு.கள்ளிப்பாடி,காங்கேயனுார், மேலநந்தல் ஆகிய கிராமங்களில் 5 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு 218 குடும்பங்கள்பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதில் 239 ஆண், 364 பெண், 204 குழந்தைகள் உள்ளனர். சின்னசேலம் வட்டத்தில் காளசமுத்திரம் கிராமத்தில் ஒரு நிவாரண முகாம் அமைக்கப்பட்டு 3 குடும்பங்கள் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதில் 3 ஆண், 4 பெண், 2 குழந்தைகள் உள்ளனர். சங்கராபுரம் வட்டத்தில் புத்திரம்பட்டு கிராமத்தில் ஒரு நிவாரண முகாம் அமைக்கப்பட்டு 5 குடும்பங்கள் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதில் 5 ஆண், 5 பெண், 13 குழந்தைகள் உள்ளனர்.திருக்கோவிலுார் வட்டத்தில் கீழையூர், திருக்கோவிலூர், வடமருதூர் ஆகிய கிராமங்களில் 3 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு 208 குடும்பங்கள் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதில் 315 ஆண், 294 பெண், 128 குழந்தைகள் என மொத்தம் 10 முகாம்கள் அமைக்கப்பட்டு 434 குடும்பங்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில் 562 ஆண்கள், 667 பெண்கள், 347 குழந்தைகள் உள்ளனர்.இம்முகாமில் உள்ள அனைவருக்கும் 3 வேளை உணவு, பாதுகாப்பான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மழைக் காலத்தில் தொற்றுநோய்கள் ஏற்படாமல் இருக்க 61 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.மாவட்ட நிர்வாகத்தின் மழைக் கால மீட்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்கி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.