உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ரகோத்தமர் சுவாமிகளின் 452வது ஆராதனை விழா

ரகோத்தமர் சுவாமிகளின் 452வது ஆராதனை விழா

திருக்கோவிலுார் ; திருக்கோவிலுார், மணம்பூண்டி ரகோத்தமர் சுவாமிகளின் 452 வது ஆராதனை விழா இன்று துவங்குகிறது.பாவபோதகர் என போற்றப்பட்ட உத்திராதி மடத்தில் பீடாதிபதி ரகோத்தம சுவாமிகளின் மூல பிருந்தாவனம் திருக்கோவிலுார் அடுத்த மணம்பூண்டியில் அமைந்துள்ளது. இவரது 452 வது ஆண்டு ஆராதனை விழா இன்று அதிகாலை 5:00 மணிக்கு பிருந்தாவனத்திற்கு நிர்மால்ய அபிஷேகத்துடன் துவங்குகிறது. 8:30 மணிக்கு உத்திராதி மடத்தின் குருஜி சத்யார்த்தம தீர்த்த சுவாமிகள் தலைமையில் சன்னிதானங்களில் சிறப்பு பூஜை, 11:00 மணிக்கு அதிஷ்டத்தில் பஞ்சாமிர்தாபிஷேகம், மூல ராமருக்கு சிறப்பு பூஜைகள், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. 10ம் தேதி அதிகாலை 5:00 மணிக்கு நிர்மால்ய பூஜை, 7:30 மணிக்கு அகண்ட பாகவத பிரவசனம், 11ம் தேதி அதிகாலை 4:00 மணிக்கு நிர்மால்ய பூஜை, 5:00 மணிக்கு மூல ராமருக்கு சிறப்பு பூஜைகள், 7:00 மணிக்கு அதிர்ஷ்டமானம் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடக்கிறது. 12ம் தேதி காலை 8:30 மணிக்கு அதிர்ஷ்டத்தில் பஞ்சாமிர்த அபிஷேகம் 10:00 மணிக்கு மூலராமர் பூஜை, பக்தர்களுக்கு தீர்த்த பிரசாத வழங்கப்படுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை உத்திராதி மடத்தின் சத்யார்த்தம தீர்த்த சுவாமிகளின் உத்தரவுப்படி, பிருந்தாவனத்தின் செயலாளர் ஆனந்த தீர்த்தாச்சாரிய சிம்மலகி செய்து வருகிறார். இதில் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !