மேலும் செய்திகள்
மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
07-Oct-2024
வாகனம் மோதி டிரைவர் பலி
19-Sep-2024
சின்னசேலம் : சின்னசேலத்தில் டிராக்டர் மற்றும் கார் மோதிக் கொண்ட விபத்தில் 5 பேர் படுகயாமடைந்தனர்.ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டம், நாச்சிவலசூர் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரம் மகன் சூர்யா ,35; டிரைவர். இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு 2:00 மணியளவில் டிராக்டரை சின்னசேலத்தில் உள்ள பட்டறையில் விடுவதற்காக ஓட்டி வந்தார்.சின்னசேலம் அடுத்த பாண்டியங்குப்பம் கூட்ரோடு அருகே சென்ற போது பின்னால் வி.கூட்ரோடு கிராமத்தை சேர்ந்த சின்துரை மகன் உதயகுமார், 19, என்பவர் ஓட்டி வந்த சைலோ கார் டிராக்டர் மீது மோதியது. இதில் சூர்யா மற்றும் காரில் பயணம் செய்த உதயகுமார், புருசோத்தமன், சந்திரசேகர், சின்னதுரை உட்பட 5 பேர் படுகாயமடைந்தனர்.விபத்து குறித்து சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
07-Oct-2024
19-Sep-2024