உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வீட்டின் பூட்டை உடைத்து 5 சவரன் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து 5 சவரன் திருட்டு

உளுந்துார்பேட்டை: திருநாவலுார் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ஐந்து சவரன் திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். உளுந்தூர்பேட்டை தாலுகா மாரணோடை கிராமத்தைச் சேர்ந்த அருள்தாஸ் மனைவி உதயா, 23; விவசாயி கூலி. கடந்த சில தினங்களுக்கு முன், வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றார். நேற்று முன்தினம் காலை வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ஐந்து சவரன் நகை, காணாமல் போயிருந்தது. இதுகுறித்த, புகாரின் பேரில் திருநாவலுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !