உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / விஜயதசமி தினத்தில் அரசு பள்ளிகளில் 66 பேர் சேர்க்கை

விஜயதசமி தினத்தில் அரசு பள்ளிகளில் 66 பேர் சேர்க்கை

கள்ளக்குறிச்சி; விஜயதசமியை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 66 மாணவ, மாணவிகள் புதிதாக சேர்ந்தனர். விஜயதசமியை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க பள்ளி, நடுநிலைப் பள்ளிகள் நேற்று மாணவர் சேர்க்கை நடந்தது. இதில் மாவட்டம் முழுவதும் ஒன்றாம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை ஒன்றியம் வாரியாக தியாகதுருகம் 10 மாணவர்கள், திருநாவலுார் 9, திருக்கோவிலுார், சின்ன சேலம் தலா 8, கள்ளக்குறிச்சி, உளுந்துார்பேட்டை தலா 7, சங்கராபுரம் 2 என மொத்தம் 66 மாணவ மாணவிகள் பள்ளிகளில் புதியதாக சேர்ந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை