உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தச்சூர் கும்பாபிஷேக விழாவில் 7 சவரன் தாலி செயின் பறிப்பு

தச்சூர் கும்பாபிஷேக விழாவில் 7 சவரன் தாலி செயின் பறிப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே கோவில் கும்பாபிஷேக கூட்ட நெரிசலில் பெண் அணிந்திருந்த 7 சவரன் தங்க செயினை மர்ம நபர்கள் பறித்து சென்றனர். கள்ளக்குறிச்சி அடுத்த தச்சூர் சிவன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் நடந்தது. இதில், சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். விழாவில், கள்ளக்குறிச்சி அடுத்த பொரசக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குமார் மனைவி மீனா, 47; கலந்து கொண்டனர். கோபுர கலசத்தில் ஊற்றிய புனித நீர் பிடிப்பதிற்காக கோவில் அருகில் சென்ற போது, கூட்ட நெரிசலை பயன்படுத்தி மீனாவின் கழுத்தில் அணிந்திருந்த 7 சவரன் தங்க தாலி செயினை மர்ம நபர்கள் பறித்தனர். தாலி செயின் பறிக்கப்பட்டதை அறிந்த மீனா பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக மீனா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி