கள்ளக்குறிச்சியில் 92 மனுக்கள்
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் மின்வாரிய நுகர்வோர் குறைதீர்ப்பு முகாம் நடந்தது. மேற்பார்வை பொறியாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். செயற்பொறியாளர் மயில்வாகனன் முன்னிலை வகித்தார். செயற்பொறியாளர் கணேசன் வரவேற்றார். முகாமில், பொதுமக்களிடம் இருந்து, 92 மனுக்கள் பெறப்பட்டன. இதில், ஒரு மனுவுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.இதர மனுக்களை பரிசீலித்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது. முகாமில், உதவி செயற்பொறியாளர்கள் அருள்சாமி, கேசவலு, முத்துக்குமார், ஜான்போஸ்கோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.